தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட யுவதி மரணம்!!

தனிப்பட்ட பிரச்சிணை காரணமாக தவறான முடிவெடுத்த யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியினை சேர்ந்த செல்வேந்திரம் கீர்த்திகா (வயது 18) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.