கிளிநொச்சியில் பாடசாலை சேதம்!!

கிளிநொச்சி – கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று பாடசாலை சமூகத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய, விமான படையினரால் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதிலே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அரச சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றமாக குறித்த சம்பவம் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.