அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவியின் கணவர்?

அஜித்-சிவா கூட்டணியில் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க  இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. தம்பி ராமையா, ரோபோ  சங்கர், யோகிபாபு என 3 பேர் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளனர்.

தற்போது வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவ போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுவது, எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் சென்னையில் நடந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிரார்த்தனை கூட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன்  வந்து கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காகதான் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் அஜித் என்றும் கூறப்படுகிறது.