பூநகரியில் மாட்டில் ஏறி வந்த யமன்!! ஒருவர் பலி!!

பூநகரி முழங்­கா­வில் பொலிஸ் நிலை­யத்­துக்கு அண்­மை­யாக, மோட்­டார் சைக்­கிள் மாட்­டு­டன் மோதி­ய­தில், மோட்­டார் சைக்­கிளை ஓட்­டிச் சென்­ற­வர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

உயி­ரி­ழந்­த­வர் மன்­னா­ரைச் சேர்ந்­த­வர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­போ­தும், அவ­ரது பெயர் விவரங்­கள் உட­ன­டி­யாக வெளி­யா­க­வில்லை.
‘மன்­னார் வட்­ட­க்கண்­ட­லைச் சேர்ந்த நபர், யாழ்ப்­பா­ணத்துக்கு நேற்று வந்­துள்­ளார். தனது அலு­வல்­களை முடித்­துக் கொண்டு மன்­னா­ருக்குத் திரும்­பிச் சென்­றுள்­ளார்.

முழங்­கா­வில் பொலிஸ் நிலை­யத்­துக்கு அண்­மை­யில், மோட்­டார் சைக்­கி­ளில் அவர் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கும்­போது, வீதி­யில் மாட்­டு­டன் மோதுண்­டுள்­ளார்’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

முழங்­கா­வில் வைத்­தி­ய­சா­லைக்கு அவர் கொண்டு வரப்­ப­டும்­போது உயி­ரி­ழந்­தி­ருந்­தாக வைத்­தி­ய­சா­லைத் தரப்­புக்­கள் தெரி­வித்­தன.