யாழ் குருசடித்தீவில் புத்தம் புதிய ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டுகள் இரண்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு துப்புரவுப் பணியில்  ஈடுபட்ட போதே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆர்பிஜிக் குண்டுகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.