கரவெட்டி கிராய் பிள்ளையார் கோவில் கேணியில் குடும்பஸ்தரின் சடலம்

ஆலயக் கேணி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை யில் சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் கிழக்கைச் சேர்ந்த இர ண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பாலசுப்பிரமணியம் (வயது 56) எனப் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதா வது,

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை மேற்படி குடும்பஸ்தர் மாடு அவிழ்ப்ப த ற்காக வயலுக்குச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவ ரைத் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கரவெட்டி கிராய் பிள்ளை யார் கோவில் கேணியில் மோட்டார் சைக்கி ளுடன் குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்ட தையடுத்து நெல்லியடிப் பொலிஸாருக்கு தக வல் வழங்கப்பட்டது.

தடயவியல் பொலிஸார் தடயம் பெற்றது டன் கரவெட்டி மரணவிசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தர விட்டார்.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.