யாழ் - கொக்குவில் சந்தியில் கடைமீது தாக்குதல்

கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சற்று முன் அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையித்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.