யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்களால் கொக்குவில் இந்துக் கல்லுாரி ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டார்!!

யாழ் இந்துக்கல்லுாரியைச் சேர்ந்த சில மாணவக் காவாலிகளால் கொக்குவில் இந்துக்கல்லுாரி ஆசிரியர் பாடசாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. யைச் சேர்ந்த சில மாணவக் காவாலிகளால் கொக்குவில் இந்துக்கல்லுாரி ஆசிரியர் பாடசாலைக்குள் வைத்து தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

கொக்குவில் இந்துவுக்கும் யாழ் இந்துவுக்கும் இடையில் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளது. அதற்காக இரு பாடசாலை மாணவர்களும் வீதிகளில் திரிந்து கூத்தடித்து வருகின்றார்கள். நேற்று யாழ் இந்துகல்லுாரியைச் சேர்ந்த சில மாணவக் காவாலிகள் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்குள் நுழைந்து ஆடியதாகவும் குறித்த மாணவர்களை வெளியே செல்லுமாறு கோரிய ஆசிரியர் யாழ் இந்து மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.