சற்றுமுன் வவுனியா பிரதான வீதியில் கோர விபத்து!! நால்வர் கவலைக்கிடம்

சற்றுமுன் வவுனியா , வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்னதாக பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பிக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்றும் வவுனியா நகரிலிருந்து கற்பகபுரத்திற்கு செல்லும் பயணிகள் பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதியமையினாலேயே இவ்விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

தரித்துநின்ற பெருந்தின்மீது மகிழுந்து மோதியதாக அங்கிருக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . விபத்துக்கான காரணம் தொடர்பில் போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

படுகாயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறியப்படுகின்றது.