யாழ் தேர்தலில் தோல்வி!! வேட்பாள மாப்பிளையின் அந்தரங்கத்தால் கலியாணம் குழம்பியது!!

உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பகுதியில் கட்சி ஒன்றின் சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் கலியாணக் கனவு குழம்பிய சோகத்தில் உள்ளார். குறித்த வேட்பாளர் பெரும்பாண்மைக் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். அப் பகுதியில் அவர் இன்னொரு கட்சி வேட்பாளரால் நுாற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.

குறித்த வேட்பாளர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்த எதிர்த் தரப்பினர் சிலர் குறித்த வேட்பாளரின் நண்பர்கள் ஊடாக அவரது சில அந்தரங்க நடவடிக்கைகளை அறிந்துள்ளனர். அதனை வைத்து அவர் தொடர்பாக முகப்புத்தகத்தில் வெளுத்து வாங்கியுள்ளனர். அத்துடன் அவர் போட்டியிட்ட இடங்களில் அவரது லீலைகளைப் பரவ விட்டுள்ளனர்.

குறித்த வேட்பாளருக்கு கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னரே திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் தேர்தல் முடிவடைந்து வெற்றியடைந்த பின்னர் திருமணம் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த வேட்பாளரது அந்தரங்கங்கள் வெளியாகி பெண் வீட்டருக்கும் தெரியவந்த நிலையில் அவற்றை  வேட்பாளரும் அவரது குடும்பமும் மறுத்து வந்துள்ளனர். குறித்த வேட்பாளர் தோல்வியடைந்தவுடன் அவர் இந்த நடவடிக்கையால் தான் தோல்வியடைந்துள்ளார் என பெண் வீட்டார் அறிந்து குறித்த வேட்பாளரை திருமணம் செய்ய மறுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.