கால்களைக் கட்டி வைத்து பிள்ளைத்தாச்சிகளுக்கு யாழ் தீவகம் நாரந்தனையில் நடந்த கொடூரம்!!

நாரந்தனையில் மாடுகளை பிடிக்கும் இளைஞர்கள் மிருகத்தனமாக நடந்துகொள்ளுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, ஆதாரத்துடன் எழுந்துள்ளது. விவசாய நிலங்களிற்குள் புகும் கட்டாக்கலிகளை பிடிப்பதற்காக பிரதேசசபை,

பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நடக்கும் வேலைத்திட்டத்திலேயே இந்த மிருகவதை நடக்கிறது.

கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகே பிரதான வீதியில் தெற்குப் புறமாகச் செல்லும் ஒழுங்கையில் பெரிய கூடார வடிவிலான, நைலோன் கயிற்றிலான மாடுகளைப் பிடிக்கும் வலையைக் கட்டி,மாடுகளை ஒழுங்கைப் பக்கமாக விரட்டி, அகப்படும் மாடுகளை நான்கு கால்களையும் ஒன்றாக மடக்கிக்கட்டி சித்திரவதை புரிந்து லான்ட்மாஸ்ரரில் 4 மாடுகள் அளவில் ஏற்றிக்கொண்டு வேலணை மேற்கில் மாடுகள் கட்டப்படும் இடத்திற்கு ஏற்றிச் செல்லப்படுகிறது.

குட்டி ஈனும் நிலையிலுள்ள மாடுகளும் இந்த நிலையிலேயே ஏற்றிச்செல்லப்படுகின்றன.

வழக்கமாக கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பல அனுமதிகளை பெற வேண்டும். மூடிய வாகனத்தில், மிருக வைத்தியரிடம் காண்பித்து உரிய அனுமதியின் பின்னரே கொண்டு செல்லலாம்.

இந்த நடைமுறை ஒன்றும் இல்லாமல் மாடுகளை நாலுகால்களையும் கூட்டிக் கட்டி சித்திர வதை செய்து , கொண்டு செல்ல இந்த மாடுபிடிகாரர்களுக்கு அனுமதி வழங்கியது யார்?

கட்டாக்காலி மாடுகளை அகற்றும் வழிமுறை இதுதானா?