யாழ் குடாநாட்டில் மிளகாய் செய்கை அமோக விளைச்சல்: மகிழ்சியில் விவசாயிகள்!

யாழ் குடாநாட்டில் மிளகாய் செய்கை அமோக விளைச்சலை கொடுத்துள்ளது.

இம் முறை அனேகமான இடங்களில் பச்சை மிளகாய் கூடுதலாக பயிரிட்டதால் தற்போது மிளகாய் அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>கடந்த சில மாதங்களாக மிளகாய்க்கு பற்றாக்குறை காணப்பட்டது.

காலநிலை தாக்கத்தினால் இச் செய்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பச்சைமிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்ட நிலையில் கூடுதலான செய்கையாளர்கள் இச்செய்கையில் ஆர்வம் காட்டி ஈடுபட்டனர்.</p><p>மிளகாய் செய்கையாளர்களுக்கு பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளது.