யாழ்.மாநகர முதல்வர் தெரிவானார்

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கலந்துரையாடலில் உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள், கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.