இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ்  பிரபலங்களான ஓவியா, ஜூலி, ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் ஆகியோர் பங்குபேறும் இசை எஃப்.எம். இசை திருவிழா நிகழ்ச்சி மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சி வரும் 17ம் தேதி மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்டார் Starxpo கேடபுள்யூசி ஃபேஷன் மால் மற்றும் அதன் மறுநாள் சிங்கப்பூரில் சன்டெக் கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.

ஓவியாவை பார்க்க சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதேசமயம் ஓவியா இசை நிகழ்ச்சியில் பாடுவரா என்பது கேள்விகுறியாக உள்ளது.