சாவ­கச்­சே­ரி­யில் சாவ­கச்­சே­ரி­யில் 80 வயது மூதாட்­டிக்கு இளம் பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்

மருத்­து­வ­மனை விடு­தி­யி­லி­ருந்து வெளி­யே­றிய 80 வயது மூதாட்­டிக்கு உதவி செய்­வது போல நடித்து அவர் அணிந்­தி­ருந்த ஒரு பவுண் நிறை­யு­டைய தங்­கத் தோடு­களை அப­க­ரித்­துச் சென்­றுள்­ளார் பெண்­ணொ­ரு­வர்.இந்­தச் சம்­ப­வம் நேற்று யாழ்ப்­பா­ணம் சாவ­கச்­சே­ரி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த மூன்று தினங்­க­ளாக சுக­யீ­ன­மாக விடு­தி­யில் தங்கி சிகிச்சை பெற்ற மூதாட்டி விடு­விக்­கப்­பட்­டார். விடுதி மருத்­து­வர் மருந்­துச் சிட்டை எழு­திக் கொடுத்­துள்­ளார்.

மூதாட்டி விடு­திக்கு வெளியே வந்து அங்­கி­ருந்த பெண்­ணொ­ரு­வ­ரி­டம் வெளி நோயா­ளர் பிரிவு மருந்­த­கத்­தில் மருந்து வாங்­கித் தரு­மாறு கேட்­டுள்­ளார்.

அந்­தப் பெண்­ணும் சிட்­டையை வாங்­கிச் சென்று மருந்­து­களை வாங்­கிக் கொண்­டு­வந்து கொடுத்­து­விட்டு காதில் தொங்­கும் நிலை­யில் காணப்­பட்ட இரு தோடு­க­ளும் வீழ்ந்து விடப்­போ­கி­றது. அதற்கு வாசர் வாங்­கிக் கொண்டு வந்து தரு­வ­தா­கக் கூறி தோடு­களை கேட்­டுள்­ளார்.

விடு­தி­யில் உத­வி­யா­ள­ராக இருக்­கும் ஒரு­வர் என நினைத்து மூதாட்டி தோடு­களை கழற்­றிக் கொடுத்­துள்­ளார். தோடு­க­ளு­டன் போன­வர் நீண்ட நேர­மாக வரா­த­தால் விடு­திப் பொறுப்­பா­ள­ரி­டம் முறை­யிட்­டார்.

இது தொடர்­பாக மருத்­து­வ­மனை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்டு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்­னர் மூதாட்­டியை வீட்­டுக்கு அனுப்பி வைத்­த­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த ஒரு மூதாட்­டிக்கு உத­வு­வ­து­போல நடித்த பெண் எக்ஸ் றே எடுக்­கச் செல்ல நகை­களை கழற்ற வேண்­டும் எனக் கூறி அவற்றை பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தா­கக் கூறி நகை­க­ளு­டன் தலை­ம­றை­வான சம்­ப­வம் இதே விடு­தி­யில் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.