டாம்குரூஸ் ரசிகர்களுடன் மோதிய மகேஷ்பாபு ரசிகர்கள்

நம்மூரில் ரஜினி-கமல் ரசிகர்கள், அஜித்-விஜய் ரசிகர்கள், சிம்பு-தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் மோதித்தான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் ஆந்திராவில் உள்ள மகேஷ்பாபு ரசிகர்கள் வேற லெவலில் மோத ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம்குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரில் பல காட்சிகளில் டாம்குரூஸ் உயிரை துச்சமென மதித்து டூப் இல்லாமல் ஸ்டண்ட் மற்றும் சாகச காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சாகசங்களை எல்லாம் மகேஷ்பாபு பல வருடங்களுக்கு முன்பே 'அகடு' படத்தில் டூப் இல்லாமல் நடித்துவிட்டார் என்று மகேஷ்பாபு ரசிகர்கள் டாம்குரூஸ் ரசிகர்களை உசுப்பேத்திவிட, தொடங்கிவிட்டது இருதரப்பினர்களுக்கும் டுவிட்டர் போர். பல மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்த இந்த மோதலை பலர் ஆச்சரியத்துடன் கவனித்து வந்தனர். இனி விஜய், அஜித் ரசிகர்களும் இதனை பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்