விஜய் திரையில் செய்ததை ரியலில் செய்த கமல்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் வெளிநாட்டில் நடைபெறும் பாராட்டு விழா ஒன்றுக்கு வேஷ்டி அணிந்து விஜய் செல்லும் காட்சி ஒன்று இருக்கும். தமிழரின் அடையாளத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்ற இந்த காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் உரை நிகழ்த்திய கமல்ஹாசன் வேஷ்டி அணிந்து தனது உரையை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியுடன் அமெரிக்காவில் கமல் பேசியது இணையதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

விஜய் திரைப்படத்தில் நடித்த ஒரு காட்சியை உண்மையாக்கிய கமலின் இந்த செயல் பாராட்டுக்குரியது என்று ரஜினி ரசிகர்கள் கூட டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு உண்மையான தமிழன் தமிழகத்திற்கு தலைமையேற்க போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கமல் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.