சமந்தாவுக்கு வந்த கூட்டம் சன்னிலியோனுக்கு வராதது ஏன்?

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் கலை நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னை அருகேயுள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

சன்னிலியோன் மற்றும் ஆண்ட்ரியா நடத்தும் கலைநிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 3000 பேர் வரை வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனால் டிக்கெட்டின் விலை ரூ.8000 மற்றும் ரூ.5000 என்று உயர்த்தப்பட்டது.

ஆனால் டிக்கெட் விலை அதிகம் என்ற காரணத்தாலா? அல்லது வேறு காரணமாகவா? என்று தெரியவில்லை, இந்த நிகழ்ச்சியை காண குறைந்த அளவு ரசிகர்களே வருகை தந்திருந்தனர். இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த சமந்தாவை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.