நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், அனிருத் ஒரே புகைப்படத்தில்...

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் - அனிருத் இருவரும் படங்களில் இணைந்து நீண்ட நாட்களாக பணியாற்றவில்லை. இவர்களுக்கு மத்தியில் அப்படி என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் ஒரு புகைப்பட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளனர். ஆம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் மகன் ஹர்ஷவர்தனா - ஸ்வேதா திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

திருமணத்தில் இயக்குநர் பாண்டியராஜன், மௌலி, தம்பி ராமையா, ராதாரவி, வாணி ஜெயராம், விசு, பிரபு உள்ளிட்ட திரையுலக பிரலங்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒய்.ஜி.மகேந்திரனின் உறவுக்காரர்களும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா தனுஷ், அனிருத் என அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.