யாழ் எழுதுமட்டுவானில் நடந்த பயங்கரம்

காரில் வந்தவர்களை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி தங்கநகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த நபரை காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட்ட ஆறு பேர் சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 7ஆம் திகதி அடையாளம் காட்டினர்.

கடந்த 18ஆம் திகதி சாய்ந்த மருது என்னும் இடத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த காரை எழுதுமட்டுவாழ் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வழி மறித்து அவர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பயனாளிகள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இரவு தபால் தொடருந்தில் தப்பி செல்ல மிருசுவில் தொடருந்து நிலையத்தில் நின்ற வேளையில் கைது செய்து மறுநாள் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த பதில் நீதவான் குறித்த நபரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.