பால் புரக்கேரி 3 மாத குழந்தை கொடிகாமத்தில் பரிதாபமாகப் பலி!!

3 மாத ஆண் குழந்தை ஒன்று மூச்­சுத் திண­ற­லால் உயி­ரி­ழந்­துள்­ளது. பால் குடித்­த­போது அது புரை­யே­றியே மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது. இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம், பாலா­வி­யில் நடந்­துள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் குழந்தை பால் குடித்­த­போது மூச்­சு­வி­டச் சிர­மப்­பட்­டது.  குழந்தை உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டது. இரவு 9 மணி­ய­ள­வில் அங்­கி­ருந்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு  மாற்­றப்­பட்­டது. சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­டு­வந்த நிலை­யில் அது பய­ன­ளிக்­காது  நேற்று நள்­ளி­ரவு 12.30 மணி­ய­ள­வில் குழந்தை உயி­ரி­ழந்­தது.

கொடி­கா­மம் பொலி­ஸார் இது தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடத்­தி­னர். சாவக்­சேரி  நீதி­மன்­றில் அறிக்கை சமர்ப்­பித்­த­னர். திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.இளங்­கீ­ரன்  மூலம் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்க வேண்­டும் என்று நீத­வான் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.