குடிகாரக் கணவனால் மூர்க்கமாகத் தாக்கப்பட்ட மகனும் தாயும் வைத்தியசாலையில்!!

மது போதையில் காணப்பட்ட குடும்பத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான தாயும் மகனும் யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆஜனித்குமார் சிவராம் (வயது-10) ஜேனித்கமார் அன்னமேரி (வயது-36) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்கானவர்களாவர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி தனங்களப்பு சாலையில் இடம்பெற்றது.  கணவனால் மோசமாகத் தாக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இருவரும் நேற்று மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.