அரசாங்க வேலை கிடைத்தவுடன் மயூரனைக் கைவிட்ட காதலி!! வவுனியா மயூரன் தற்கொலை

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ம.மயூரன்(30) என்ற இளைஞர் இன்றயை தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இளைஞன் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணிற்கு அரச வேலை கிடைத்துள்ளதால், குறித்த இளைஞனை கைவிட்டுள்ளதாகவும், இதனால் மனம்

உடைந்த ம.மயூரன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தினை கண்ட தாயார் அயலிலுள்ளவர்களின் உதவியுடன், இளைஞரை வவனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்

தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.