சாவகச்சேரி பிரதேசத்தில் கள்ள மண் ஏற்றியவர்கள் கைது!!

இன்று அதிகாலை 1:00 மணிமுதல் 4:00 மணிவரை சாவகச்சேரி பொலிசார் நேரம் தொடர்ச்சியான தேடுதலை மேற்கொண்டபோது கள்ளமண் ஏற்றிய 9பேரை கைதுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை தச்சன்தோப்பு பகுதியில் மண் ஏற்றிவந்த லாறி வாகனத்தை மறித்தபோது அதிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்ற

இரு சந்தேகநபர்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

இதேபோன்று முகமாலை பகுதியில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரியை கைதடி பகுதியில் வைத்து மறித்து போது தப்பித்தோடிய 7போரையும் சாவகச்சேரி பொலிசார் கைதுசெய்த பொலிசார் வழக்கு

பதிவுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். சாவகச்சேரி பிரதான பொலிஸ்பொறுப்பதிகாரி B.விக்கிரமசிங்க தலைமையில் பெரும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் A.விஜகோன் தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆர்.பிரதீப், மற்றும்,பண்டார றட்ணாயக்கா செனவரத்தின,பொலிஸ் சாரதி றங்க ஆகியோர் 4 மணிநேரம் தொடர்ச்சியான தேடுதலை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.