கொடிகாமத்தில் வடி வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவன் அதிதீவிர சிகிச்சைக்காக கொழும்புக்கு

சாலை விபத்­தில் காய­ம­டைந்த மாண­வன் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டான் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

கொடி­கா­மம் சந்தை சாலை­யைச் சேர்ந்த மாண­வன் அண்மையில் தனி­யார் கல்வி நிலை­ யத்­துக்­குச் சென்ற வேளை­யில் முதன்­மைச் சாலை­யில் பட்டா ரக வடி வாக­னத்­தால் மோதுண்­டார்.

தலை­யில் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான நிலை­யில் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில்  அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழப்­பா­ணம் போதனா  மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு அங்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு தேசிய மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

வாக­னத்­தின் சாரதி கொடி­கா­மம் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு சாவ­கச்­சேரி  நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­டார். வழக்கை விசா­ரித்த நீத­வான் சார­தி­யைப் பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தார்.