குடும்பத் தலைவரைக் கொலை செய்ய முற்பட்டவருக்கு யாழ் மேல்நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!

குடும்­பத் தலை­வரை கொலை செய்­யும் நோக்­கில் கத்­தி­யால் குத்­திப் படு­கா­யம் ஏற்­ப­டுத்­தி­ய­வ­ருக்கு 2 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு 5 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் வண்­ணார்­பண்­ணை­யில் கடந்த 2014 ஆம் ஆண்டு 31ஆம் திகதி தாக்­கு­தல் இடம்­பெற்­றது. குடும்­பத் தலை­வ­ரான ச.ராஜ­காந்­தன் என்­ப­வர் மீது கத்­தி­யால் குத்தி வயிற்­றி­லும் தலை­யி­லும் படு­கா­யம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தக் குற்­றச்­சாட்­டில் அதே இடத்­தைச் சேர்ந்த க.சூரி­ய­காந்­தன் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார். இந்த வழக்கு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றுக்­குப் பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

கொலை எத்­த­னிப்­புக் குற்­றச்­சாட்­டில் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போது சந்­தே­க­ந­பர் தன்­மீ­தான குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டார்.

அத­னை­ய­டுத்து அவ­ருக்கு மேற்­கு­றித்த தண்­டனை விதிக்­கப்­பட்­டது.