மட்டுவில் பகுதியில் மாணவியைக் காயப்படுத்திய இளைஞன்!!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வந்த மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மோதியதில் மாணவி காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று மாலை 5:30 மணியளவில் மட்டுவில் வேலுப்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் மட்டுவில் பகுதியில் வசித்துவரும் 10 வயதுடைய சண்முகராசு திரிஷிகா என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.