புத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுடன் புத்தூர் சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த புத்தூர் கலைமகள் பகுதியைச் சேர்ந்த செல்வக்கண்டு ரூபன் (23) என்ற இளைஞனே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.