தமிழ் பெண்கள் குளிப்பதை படம் எடுத்த முஸ்லிம் வியாபாரிகள்!!

யாழ் பண்டத்தரிப்பு நகரத்தில் வர்த்தக நிலையம் அமைத்துள்ள முஸ்லிம் வர்த்தகர்களால் அந்த பகுதியில் வீணாண பதற்றநிலை தோன்றி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பண்டத்தரிப்பு நகரப்பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புடைவைக்கடைகள் இரண்டும், ஹொட்டல் ஒன்றுமே அமைக்கப்பட்டுள்ளன. புடைவைக்கடையில் பணியாற்றுபவர்களிற்காக வை.எம்.சி.ஏ கட்டிடத்தை வாடகைக்கு பெற்று வைத்துள்ளார்கள். அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதியில், மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா வந்த பெண்கள் அண்மையில் தங்க வைக்கப்பட்ட சமயத்தில், புடைவைக்கடையில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர்கள் அந்த பெண்கள் குளிக்கும் சமயத்தில் படம் பிடித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியபோதும், பொலிசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

பொலிசார் நடவடிக்கை எடுக்காததற்கு காரணமாக பிரதேச மக்கள் கூறும் காரணம்- அங்குள்ள முஸ்லிம் ஹொட்டலில் பொலிசாருக்கு இலவச உணவு வழங்கப்படுவதால், முஸ்லிம்களிற்கு எதிரான முறைப்பாட்டை பொலிசார் கவனத்தில் எடுப்பதில்லையென்கிறார்கள்.

இதேவேளை, முஸ்லிம் ஹொட்டலில் அடியாட்கள் போன்ற சிலருக்கு உணவும், மதுபானமும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் நகரத்தில் ரௌடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நகர மத்தியில் உள்ள வர்த்தகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பண்டத்தரிப்பில் வர்த்தக நிலையங்களை அமைத்த முஸ்லிம் வர்த்தகர்கள் அண்மையில் இளவாலையில் இறைச்சிக்கடையை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது பிரதேசத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.