யாழில் விதாணையைக் கடித்துக் குதறிய குடும்பஸ்தர்!! விதாணை ஏன் பொலிசில் முறையிடவில்லை?

கிரா­ம­ அலுவலர் ஒரு­வரை இனந்­தெ­ரி­யா­த­வர் கடு­மை­யாக தாக்கி கடித்­துக் காயப்­ப­டுத்­திய சம்­ப­வம் ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் நடந்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் நகர்ப் பகு­தி­யில் உள்ள கிராம அலுவலர் பிரி­வி­லேயே இந்­தச் சம்­ப­வம்  நடந்­துள்­ளது. கிராம அலுவலரி­டம் சென்ற ஒரு­வர் அவ­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில்  ஈடு­பட்­டுள்­ளார். வாக்­கு­வா­தம் முற்றி அவ­ருக்­கும், கிராம அலுவலருக்­கும் இடையேமோதல் ஏற்­பட்­டது.

அந்த நபர் கிராம அலுவலரின் கையைக் கடித்­துக் குத­றி­னார் என்று  தெரி­விக்­கப்­பட்­டது. கையில் பலத்த காயத்­துக்­குள்­ளான கிராம அலுவலர்  மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­டன என்­று  தெரி­விக்­கப்­பட்­டது.

“எனது அலு­வ­ல­கத்­துக்கு மன­நோ­யாளி ஒரு­வர் வந்­தார். என்­னு­டன் கடு­மை­யா­கத் தர்க்­கம் செய்­தார். எனக்­கும், அவ­ருக்­கும் இடையே மோதல் நடக்­க­வில்லை. எனக்­குக் காய­மும் இல்லை.”- என்று கிராம அலு­வ­ல­ரைத் தொடர்பு கொண்­ட­போது கூறி­னார்.

இதே வேளை விதாணையும் பெரும் பிழை விட்டபடியால்தான் பொலிசில் முறைப்பாடு செய்யாது அமுக்கமாக இருக்கின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் ரெிவித்துள்ளன.