யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி பரந்தனில் விபத்து

பரந்தன், பூநகரி பகுதியில் இன்று காலை லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தம்புள்ளை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறி தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த நீர் வடிகாண் கட்டமைப்பில் மோதுண்டதால் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின்போது, சாரதி சிறு காயங்களுடன் தப்பித்துக்கொண்டதுடன், லொறிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.