குலேபகாவலி - முன்னோட்டம்

கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’, பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸாகிறது.

பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குலேபகாவலி’. கல்யாண் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரேவதி, ஆனந்தராஜ், மதுசூதன் ராவ், ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், யோகிபாபு, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 70 நாட்களுக்கு இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.