ஊர்காவற்துறையில் பழகிய யுவதியுடன் பாலியலுறவு கொள்ள பிடித்து இழுத்தவர் கைது!!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட தம்பாட்டி பகுதியில் யுவதியினை கையினை பிடித்து இழுத்து பாலியல் துன்புறுத்தல் விடுத்த இளைஞனை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான இளைஞன் நாரந்தனை பகுதியினை சேர்ந்த 26வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த இளைஞன் யுவதியின் வீட்டுக்கு சென்று வருவதனை வழமையாக கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சந்தர்ப்பத்தில் தவறானமுறையில் நடந்து கொள்ளும் முகமாக கையினை பிடித்து இழுத்துள்ளார்.

இளைஞனின் நடவடிக்கை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் கூறினர்.