யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடையோரின் பெற்றோருக்கு பொலிஸார் அறிவுரை

யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு இந்த அறிவுரை வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள், யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.