விக்ரம் பிரபுவுக்கு ஜோடியானார் ஹன்சிகா

விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விக்ரம் பிரபு நடிப்பில் இதுவரை மொத்தம் 10  படங்கள் ரிலீஸாகியுள்ளன. 11வது படமாக ‘பக்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ள  இந்தப் படத்தில், நிக்கி கல்ரானி மற்றும் பிந்து மாதவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப் படத்துக்கு ‘துப்பாக்கி முனை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.