மோகன்லாலின் அடுத்த படம்... மும்பையில் நேற்று தொடங்கியது!

மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் நேற்று தொடங்கியது.

மலையாள சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மோகன்லால், ‘ஒடியன்’ மற்றும் நிவின் பாலி நடித்துவரும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு,  நேற்று மும்பையில் தொடங்கியுள்ளது.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை, அஜோய் வர்மா இயக்குகிறார். சஜு தாமஸ் கதை எழுத, சந்தோஷ் துண்டியில் ஒளிப்பதிவு செய்கிறார். மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார். இவர்,  பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.