பொங்கலுக்கு ரிலீஸாகிறது அருண் விஜய் படத்தின் டீஸர்

அருண் விஜய் நடித்துவரும் ‘தடம்’ படத்தின் டீஸர், பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர், பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.