யாழில் கன்றுத்தாச்சி மாட்டை இறைச்சிக்காக அறுத்த காடையர்கள்

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் சினைப்பட்ட பசு மாடு ஒன்று இன்று சட்டவிரோதமாக இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது என நவாந்துறை மக்கள் விசனம் தெரிவித்தனர்.


"அந்தப் பசுவின் கன்று சந்தைக் குப்பத்தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் கைது செய்து தண்டிக்கவேண்டும்" என்றும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

"யாழ்ப்பாணம் நாவாந்துறைச் சந்தைப் பகுதியில் பசு மாடு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்டப்பட்டுள்ளது. அதன் வயிற்றுக்குள் இருந்த கன்று சந்தையின் குப்பத் தொட்டிக்குள் போடப்பட்டுள்ளது. மாட்டின் உடற் கழிவுகளும் சந்தைப் பகுதியில் போடப்பட்டுள்ளன.

அதனை இறைச்சிக்காக வெட்டியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இறைச்சிக்கான மாடு வெட்ட முடியும். இது சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது" என்று பொலிஸார் தெரிவித்தனர்.