யாழில் விசித்திர நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கிய திருடன்!

யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த முதியவர் ஒருவர் மேற்கொண்டுவந்த விசித்திரநடவடிக்கையால் கைதாகியுள்ளார்.

யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன்­து­றை­யில் வசித்­து­வ­ரும் சுமார் 60 வய­து­டைய குறித்த நபர் தனது வீட்­டுக்கு அரு­காக யாரா­வது சென்­றால் அவர்­க­ளுக்கு கல் வீசித் தாக்­கு­தல் நடத்­து­வார்.

இது புற­மி­ருக்க அந்­தப் பகுதி உள்­ளிட்ட பல இடங்­க­ளி­லும் மின்­மோட்­டர்­கள் உள்­ளிட்ட இலத்­தி­ர­னி­யல் பொருள்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

குறித்த நபர் தொடர்­பில் சந்­தே­கம் கொண்­ட­தால் அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு முறை­யிட்­ட­னர். அதன்­படி குறித்த நப­ரின் வீட்­டுக்­குச் சென்ற பொலி­ஸார் மேற்­கு­றித்த பொருள்­களை மீட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்­துக் கடந்த வியா­ழக்­கி­ழமை குறித்த நபர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.