ரூ.300 கோடி பட்ஜெட்டில் நடிக்கவுள்ள விக்ரம்; வெளியான அறிவிப்பு

`சாமி-2', `துருவ நட்சத்திரம்' படங்களை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள `ஸ்கெட்ச்' படம் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ  நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில் விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று  பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில்  தயாரிக்கிறது. வருகிற அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 2019 டிசம்பரில்  படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.