யாழ் பளைப் பகுதியில் சற்று முன் துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்

பளைப் பகுதியில் சற்று முன்  சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் இவரைத் துரத்திச் சுட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படுகாயமடைந்த சுரேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.