யாழ் கல்வியங்காட்டில் ரவுடிகள் அட்டகாசம்!! சாப்பாட்டுக் கடை அடித்து உடைக்கப்பட்டது!

யாழ் கல்வியங்காட்டு சந்தியில் ஆடியபாதம் வீதியில் உள்ள சாப்பாட்டுக் கடை நிறைவெறியில் வந்த ரவுடிகளால் சற்று முன் அடித்து உடைக்கப்பட்டது. குறித்த கடைக்கு நிறை வெறியில் வந்த ரவுடிகள்


சாப்பாடு ஓடர் கொடுத்தும் சாப்பாடு வர தாமதமாகியதால் கடையை அடித்து உடைத்ததாகவும் அத்துடன் கடை உரிமையாளரையும் தாக்கியதாகவும் கடை உரிமையாளர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். தற்சமயம் பொலிசார் குறித்த கடைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் கல்வியங்காட்டுப் பகுதிக்கு அண்மையில் நாயன்மார்கட்டு மற்றும் அயல்பகுதிகளில் ரவுடிகளாக ஏராளமானவர்கள உள்ளதாகவும் அவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் குறித்த கடைப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.