நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு விளக்கமறியல்

நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்னாள் நின்று கைபேசியில் ஆபாசப்படம் பார்த்த குற்றச்சாட்டில் கைதான குடவத்தை பகுதியினை சேர்ந்த ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை பருத்தித்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி அவர்களின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அதே போல் 2கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான துன்னாலை பகுதியினை சேர்ந்த இளைஞனும் நேற்று நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.