கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்: மனைவி பரிதாபமாக பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் வீடொன்று தீப்பற்றியதில், 24 வயதான யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இதனால் எரிகாயங்களுக்கு உள்ளான, குறித்த யுவதியின் மகள் மற்றும் கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, மரணித்த பெண்ணின் கணவரே வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே, வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.