தட்டா தெருவில் தாலி பறித்தவர்கள் இவர்கள்தான்!!

 தட்டா தெரு பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தாலியினை அறுத்தெடுத்து சென்ற நபர்களை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் அரை மணிநேரத்துக்குள் பிடித்துள்ளதுடன் கொள்ளையர்களிடம் இருந்து 10பவுண் தாலியினையும் மீட்டெடுத்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் (05) மதியம் இடம்பெற்றுள்ளது.

கைதான இரு கொள்ளையர்களும் சுண்னாகம் மற்றும் தெல்லிப்பளை பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த பெண் இந்திய துணைத்தூதரகத்திற்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

மதியம் தட்டா தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இவரை பின்தொடர்ந்த இருவர் ஆட்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் வைத்து தாலியினை பறித்தெடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பில் அந்த யுவதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரைந்து செயற்பட்டு முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

வழிப்பறி இடம்பெற்ற பகுதிக்கு வந்த பொலிஸார் அந்தப்பகுதியில் பொருத்தியிருந்த சீ.சீ.ரீ.வீ கமராவின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சில பகுதியில் வீதி சோதனை மேற்கொண்ட பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் கையும் மெய்யுமாக பிடித்திருந்தனர்.

அத்துடன் அறித்தெடுக்கப்பட்ட 10பவுண் தாலியும் கைபெற்றப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.