கடன் தொல்லை!! வயோதிப தம்பதிகள் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை!! கைதடியில் சம்பவம்!!

தென்மராட்சி கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி இருவரும் கிணற்றுக்குள் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதடி கிழக்கு நவபுரம் பகுதியில் வசித்துவரும் 67 வயதுடைய சின்னையா வேலாயுதம் 62 வயதுடைய வேலாயுதம் நாகம்மா ஆகியோரே இவ்வாறு இன்றையதினம் காலை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இவர்களை நேற்று மாலை வேளையில் இருந்து காணாத அயலவர்கள் தேடியபோது இவர்களின் சடலம் கிணற்றுக்குள் இருப்பதை அவதானித்தனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.