01. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்

மேஷம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ரிஷபம்

அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

மிதுனம்

அதிகாலை 3.12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கடகம்

பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

சிம்மம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

கன்னி

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

துலாம்

அதிகாலை 3.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

விருச்சிகம்

அதிகாலை 3.12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவர். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

தனுசு

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

மகரம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். றவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கும்பம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மீனம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்