சுந்தர்.சி.யின் அடுத்த பேய் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’, அரண்மனை 2’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படங்களில் சுந்தர்.சி முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் அவ்னி மூவிஸ் சார்பாக ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

இதில் நாயகனாக வைபவ் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கணேஷ், சிங்கம் புலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். பாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். திகிலுடன் கூடிய காமெடி படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு செல்போனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.