மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தவர் அனுஷ்கா. இப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் தனது 57-வது படமாக சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது ‘பாகுபலி-2’, ‘எஸ்3’  உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அஜித்துடன் மீண்டும் இணைவதற்கு அனுஷ்கா மறுப்பு ஏதும் தெரிவிக்கமாட்டார் என்றே நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.