என்னுள் ஆயிரம் படம் ஏப்ரல் 1ம் தேதி ரிலீஸ்

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் தயாரிக்கும் படம் ‘என்னுள் ஆயிரம்’. இதில் டெல்லி கணேஷின் மகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மரீனா நடித்திருக்கிறார். இப்படத்தை ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ண குமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகன் மகா பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். நாயகி மரீனா வங்கியில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். மகாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையப்படுத்தி திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்துக்கு கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை அதிசயராஜ் செய்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை மாதவன் வெளியிட்டார். தற்போது இப்படத்தை ஏப்ரல் 1ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.